Wednesday 24 June 2015

கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார்



தேவன் பரிசுத்தராக இருக்கிறார் நம்மை பரிசுத்தத்துக்கு அழைத்து இருக்கிறார் அவர் நம்மிடத்தில் வாசம் செய்ய விரும்புகிறார் ஏனென்றால் நம்மை படைத்தவர் அவரே. சர்வத்தையும் படைத்த  தேவன் நம்மீது அன்பாக இருக்கிறார்.அன்பான தேவன் நம் மத்தியில் வாசம் செய்வது எவ்வளவு இன்பமாக இருக்கும். அனேக கிறிஸ்துவர்கள் நிம்மதி, சமாதனம், இளைப்பாறுதல் இல்லாமல் இருகிறார்கள் சிலர் மன அழுத்தத்தால் என்ன செய்வது என்று தெரியாமல் இருகிறார்கள். இந்த சூழ்நிலையில் சமாதனம் சந்தோசம் தர நம்மை படைத்த ஆண்டவர் இருக்கிறார் என்று விசுவாசிகிறிகளா? மெய்யாகவே உங்களுக்கு கிடைக்கும்.  அன்பான தேவன் ஏன் எனக்கு சமாதனம் சந்தோசம் தரவில்லை என்ற கேள்வி உங்களுக்குள் இருக்கும்.தேவன் சொல்லுகிற வார்த்தையை நீங்கள் அன்புடன் கைகொண்டால் அவர் மெய்யாகவே உங்களுக்கு விடுதலை கிடைக்கும். முதலில் அவருடைய சத்தியத்தை அறிய வேண்டும் அந்த சத்தியம் உங்களை விடுதலையாக்கும். அப்பொழுது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களை விடுதலையாக்குவார்  தேவன் அன்பாகவே இருக்கிறார். 

தேவனுடைய சத்திய வார்த்தைகள்   நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே. எபிரெயர்13.5. இந்த காலகட்டத்தில், பண விசயத்தில் போதும் என்ற மனதுடன் இருக்கும் மனிதர்களை காண முடிவதில்லை, அதிக ஆசை படுகிறவர்கள் தான் அதிகம் போதும் என்கிற எண்ணம் இல்லை என்றால் ஆண்டவாரகிய இயேசு கிறிஸ்து உங்கள் மத்தியில் இருக்கமாட்டார். நீங்கள் கைவிடபடுவீர்கள். இதனால் நீங்கள் மன அழுத்தம், நிம்மதி இல்லாமை , சமாதனம் இல்லாமை போன்றவற்றிகுள்ள ஆகிறிகள். சத்திய வசனத்துக்கு அன்புடன் கீழ்படியுங்கள் சமாதானத்தை பெற்று கொள்ளுங்கள். 

II தீமோத்தேயு 2:22 அன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு. அனேக வாலிபர்கள் சிறுவயதிலே கண்களின் இச்சையில்  அடிமை பட்டு இருகிறார்கள். அவர்கள் பாவத்திலே சந்தோசம் அடைகிறார்கள். அதிலிருந்து மீளமுடியாமல் அவர்களுடைய வாழ்கையை  சீரடித்துகொள்கிரார்கள். இது தேவனுக்கு முன்பாக அருவருப்பாய்  இருக்கிறது, கண்களின் இச்சை, விபசாரம், வேசித்தனம் இவை அனைத்தும் மாயை இதன் முலம் அழிவை தேடி கொள்கிறீர்கள். இந்த உலகம் அழிந்து போகும் இதன்படி வாழுகிறவர்கள்  அழிந்த்துபோவார்கள். அவருடைய சத்தியத்தின்படி வாழுகிறார்வர்கள் அழிவதில்லை இது தேவனுடைய வார்த்தை   

Friday 29 May 2015

தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்

தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்.

          ஒருவருக்கும் இடறலற்றவர்களாயிருங்கள் நீங்கள் எந்த ஜாதியாகவும் இருந்தாலும் மற்ற ஜாதி மக்களுக்கு இடறலற்றவர்களாயிருங்கள ஏன் என்றால் நாம் எதை செய்தாலும் தேவனுடைய மகிமைக்கென்று செய்ய வேண்டும். கீழ் ஜாதி மக்களை கீழாகவும் மேல் ஜாதி மக்களை மேலாகவும் பாராமல் நாம் தேவனுக்கு முன்பாக சகோதரர்களாக இருக்கிறோம். அவருக்கு பிரியமானதை செய்வோம்.   

                                   
.       
நீங்கள் எந்த ஒரு காரியம் செய்யும் பொழுது அது ஒரு உதவி அல்லது ஒரு நன்மையாக கூட  இருக்காலம். அதை செய்யும் பொழுது மற்ற ஜாதி மக்களுக்கு இடையுறு இல்லாமல் இருங்கள் பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது


Thursday 28 May 2015

நித்திய ஜீவனை குறித்து வேதாகமம் கூறுவது என்ன ?

நித்திய ஜீவனை குறித்து வேதாகமம் கூறுவது என்ன ?
எழுதியவர்  : தானியேல் 

நித்திய ஜீவனை பற்றி நாம் அதிகமாக புதிய ஏற்பாட்டில் பார்க்கிறோம். முதலில் நித்திய ஜீவன் என்றால் என்ன என்பதை பார்ப்போம் 
யோவான்3:17 ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன், முதலில் நாம் மெய்தேவனையும் அவர் அனுப்பின இயேசுகிறிஸ்துவையும் நாம் அறிய வேண்டும் என்பதே .இதை படிக்கும் போது நீங்கள் என்னுடனே தியானிக்க வேண்டும் என்று விருப்புகிறேன். இந்த வசனம் கூறுகிறபடி  தேவனையும் இயேசுவையும் அறிய வேண்டும் என்றவுடனே வேதாகமத்தை முழுவதும் தெரிந்து  கொள்ளுதல் என்று அர்த்தம் இல்லை. வேதாகமத்தை இயேசுவை பின்பற்றாதவர்கள், விஞ்ஞானிகள், அறிவாளிகள் என அநேகர் வேதாகமத்தை படித்து தெரிந்து வைத்து இருகிறார்கள். சாத்தான்கூட இந்த வேதத்தை தெரிந்து வைத்து இருக்கிறான் என்று வேதம் சொல்லுகிறது. இதை மாதிரி நீங்கள் படித்து தெரிந்து வைத்தால் நித்திய ஜீவன் கிடைக்கும் என்று எண்ணாதீர்கள் அப்படியானால் நீங்கள் வஞ்சிக்கபடுவீர்கள். எனவே அப்போஸ்தலனகிய  யோவான் கூறும் அறிதல் என்பதை நாம் தெளிவு படுத்தி கொள்ளவேண்டும் 1யோவான் 2:3 வசனம் கூறுவது என்னவென்றால் அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறவர்களானால், அவரை அறிந்திருக்கிறோமென்பதை அதினால் அறிவோம் இப்பொழுது நீங்கள் தெளிவு கொள்ளலாம் ஒன்றான மெய்தேவனும் அவர் அனுபினவராகிய இயேசுகிறிஸ்து கூறும் கற்பனைகளை கைக்கொள்ளவேண்டும் என்பதே. நாம் வேதகாமத்தை படித்து தெரிந்து கொள்ளுவதை விட அவருடைய கற்பனைகளை கைகொள்ளுவது மேலானது. அவருடைய கற்பனைகளை கைகொள்ளும் போது நாம் தேவனை நன்கு அறியமுடியும் அப்பொழுது நித்திய ஜீவனை தேவன் நமக்கு தருவார்.

யார் நித்திய ஜீவனுக்குள் பிரவேசிக்க முடியும் ?

ஒரு தடவை இயேசுகிறிஸ்துவிடம்  இப்படியாக  கேள்வி கேட்டான் நித்திய ஜீவனை அடையும்படி நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் அவர் கூறுகிறார் சில கற்பன்னைகளை மட்டும் கூறி அதை கை கொள் என்று சொல்லுகிறார் அவை   கொலை செய்யாதிருப்பாயாக, விபசாரம் செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச் சாட்சி சொல்லாதிருப்பாயாக;
உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக; உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பவைகளையே அதற்க்கு அவன் நான் சிறு வயது முதல் இதை கைகொள்ளுகிறேன் இன்னும் என்னிடத்தில் என்ன குறை என்று கேட்டான் . அதற்க்கு இயேசு  நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும். பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.
அந்த வாலிபன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, துக்கமடைந்தவனாய்ப் போய்விட்டான். எனவே ஐசுவரியவான்கள் நித்திய ஜீவனுக்குள் போவது கஷ்ட்டமான காரியம்  

யார் நமக்கு நித்திய ஜீவனை கொடுக்க முடியும் ?

இந்த நித்திய ஜீவனை கொடுக்கிரறவர் வானத்திலிருந்து இரங்கி வந்ததவர் அவரே  ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து அவர் மட்டுமே நமக்கு நித்திய ஜீவனை கொடுக்க முடியும்  யோவான் 10 :18 ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரமுண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார்.எனவே அவருடைய கற்பணைக்கு நாம் செவி கொடுக்கவேண்டும். அவரே நமக்கு நல்ல மேய்ப்பராய் இருந்து கடைசி காலத்தில் நம்மை எழுப்புவார் 

  

தேவனுடைய சித்தம்

யோவான் 3:16
    தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
        தேவன் நமக்கு நித்திய ஜீவனை தரும்படியாக அவருடைய சொந்த மகனை தந்து இருக்கிறார், தேவனுடைய சித்தம் மிக பெரியது எப்படியென்றால் ஒருவனும் கெட்டு போககூடாது என்பது அவருடைய சித்தம் இதை வாசிக்கும் நீங்கள்கூட கெட்டு போககூடாது என்பது தேவனுடைய சித்தமாக இருக்கிறது. எனவே இதற்க்கு என்ன செய்ய வேண்டும் என்றால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்துவை விசுவாசிக்க வேண்டும். விசுவாசம் என்பது மூடநம்பிக்கை இல்லை விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது  இந்த விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்க வேண்டும் அவர் எப்படி இந்த பூமியில் வாழ்ந்தார்  இயேசு கூறுகிறார் நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்; நம்முடைய வாழ்கையையும் அப்படியாக இருக்க வேண்டும் இயேசுவிடம் இருந்து தாழ்மையை கற்று கொண்டு வாழ வேண்டும் இது தான் விசுவாசம் நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது இயேசுவிடம் பாவம் காணப்பட வில்லை இப்படியாக நாம் வாழும் பொழுது நிச்சயமாக தேவன் நமக்கு நித்திய ஜீவனை தருவாங்க ஆமென்
    இப்படிக்கு : தானியேல்