Friday 6 January 2017

பாடுகளை அனுபவித்தல்

எழுதியவர் : தானியேல் 

கிறிஸ்துவை நாம் அறியும் பொழுது நிச்சயமாகவே அவரை நாம் அனுபவிக்க முடியும்.  நாம் இந்த உலகத்தில் எப்படி கிறிஸ்துவை  அனுபவிக்க முடியும் என்பது தான் கேள்வி ? இயேசு கிறிஸ்து இந்த பூமியில் தேவனுடைய சித்தத்தை செய்ய எப்படி இந்த உலகத்தை அனுபவித்தார் என்று பார்த்தோமானால், அதே போல் நாமும் கிறிஸ்துவை அனுபவிப்போம். அவரை அறிந்து இருக்கிறேன் என்று சொல்கிற அனைவரும் கிறிஸ்துவை போல இந்த உலகத்தை அனுபவிக்க முடியும்.

தேவனுடைய  குமாரனாய் இருந்த இயேசு இந்த பூமியில் மனுஷகுமாரனாய்(சாதாரன மனுஷனாய்) இருந்தார். வேதத்தில் பார்க்கிறோம் இயேசு நம்மை போல் எல்லாவிதத்திலும் சோதிக்கப்பட்டார் 
எபிரெயர் 4:15 என்று, மத்தேயு 4, லூக்கா 4 ஆம் அதிகாரத்தில் வெளிப்படையாகவே போடப்பட்டுள்ளது. பிசாசு, இயேசுவை  சோதிக்கும் போது மூன்று தடவையும் நீர் தேவனுடைய குமாரனா என்று சோதித்தான். இயேசு அந்த சோதனையை ஜெயித்தார். அன்று முதல் அவருடைய வாழ்க்கையில்  தன்னை மனுஷகுமாரன் (சாதாரன மனுஷன்) என்று எண்ணத்தை வைத்து இருந்தார் சிலுவையின் மரண பரியந்தமும்  அந்த வார்த்தைக்கு தகுதியானவாராயும்   இருந்தார். 

இந்த பூமியிலே  நாம் அனுபவிக்கிறதுக்கு அநேக காரியங்கள்  உள்ளது . கிறிஸ்து அனுபவித்த காரியங்களை நாம் அனுபவிப்போமானால் மிகவும் பாக்கியவான்களாக இருப்போம். அவர் அனுபவித்தது உலகத்தினால் உண்டானது அல்ல அது தேவனால் உண்டான காரியம் மட்டுமே. நாம் இந்த பூமியில் குடித்து வெறித்து வாழும் வாழ்க்கை அல்ல. அவர் அனுபவித்த பாத்திரத்தை யாராலும் விவரித்து கூறுவது கடினம்.அந்த பாத்திரமானது உயிர் இல்லாத சரீரம் எப்படி இருக்கும் அதை போன்றது இதை  சகோ.சகரியா பூணன்  கூறும்பொழுது "அந்த பாத்திரமானது இயேசு கிறிஸ்துவுக்கும் பிதாவுக்கும் இருக்கும் ஐக்கியத்தை பிரிக்கும் காரியமாக இருந்தது", நாம் அனைவர் மீதும் அவர் அன்பு வைத்ததினாலும்  அந்த பிரிக்கும்  பாத்திரத்தை அனுபவித்தார். ஆம் சிலுவை வழியாக அந்த பாடுகளையும் துன்பத்தையும்  அனுபவித்தார். அவர் பட்ட பாடுகளை விவரித்து கூறுவது மனிதனால் கூடாது அதை ஆவியானவர் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் வெளிப்படுத்துகிறார். அப்பொழுது கிறிஸ்துவின்  அன்பை பரிசுத்த ஆவியானவரால் நம்முடைய இருதயங்களில் ஊற்றுகிறார். அப்பொழுது கிறிஸ்துவின் அன்பு விளங்குகிறது. அவர் பட்ட பாடுகளை, ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஆவியானவர் வெளிப்படுத்துவராக. 


நமக்கு கிறிஸ்துவை விசுவாசிக்கிறதற்கும்  மட்டும்  அருளப்படவில்லை பாடு படுவதற்கும் அருளப்பட்டிருக்கிறது பிலிப்பியர் 1:29 . இதை பவுல் நன்கு உணர்ந்து அதிகமாய் பாடுகளை அனுபவித்தார்.  பவுல் இவ்விதமாய் பாடுகளை அனுபவித்தார் II கொரிந்தியர் 11 அதிகாரம்  24 .யூதர்களால் ஒன்றுகுறைய நாற்பதடியாக ஐந்துதரம் அடிபட்டேன்; 25. மூன்றுதரம் மிலாறுகளால் அடிபட்டேன், ஒருதரம் கல்லெறியுண்டேன், மூன்றுதரம் கப்பற்சேதத்தில் இருந்தேன், கடலிலே ஒரு இராப்பகல் முழுவதும் போக்கினேன். 26. அநேகந்தரம் பிரயாணம்பண்ணினேன்; ஆறுகளால் வந்த மோசங்களிலும், கள்ளரால் வந்த மோசங்களிலும், என் சுயஜனங்களால் வந்த மோசங்களிலும், அந்நிய ஜனங்களால் வந்த மோசங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும், வனாந்தரத்தில் உண்டான மோசங்களிலும், சமுத்திரத்தில் உண்டான மோசங்களிலும், கள்ளச்சகோதரரிடத்தில் உண்டான மோசங்களிலும்; 27. பிரயாசத்திலும், வருத்தத்திலும், அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும் தாகத்திலும், அநேகமுறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன்.   

II தீமோத்தேயு 2:3 , II தீமோத்தேயு 4:5  நீயும் இயேசுகிறிஸ்துவுக்கு நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவி, இறுதியாக அவருடைய உத்தம குமாரனாகிய தீத்துவிடமும் ,தீமோத்தேயுவிடமும் தீங்கநுபவிக்கவே கூறுகிறார். 

நாம் இந்த பூமியில் அனுபவிக்க வேண்டும் என்றால்.  துன்பங்களையும் , பாடுகளை அனுபவிப்போம். இயேசு கிறிஸ்துவின் மேல் உள்ள அன்பினால் இந்த காரியங்களை அனுபவிப்போம் . தேவனுடைய நாமம் இந்த பூமியில் மகிமைபடுவதாக. ஆமென்