Tuesday 1 August 2017

தேவன் யார் மீது சந்தோசமாக இருக்கிறார் ?



தேவன் நம் மீது அன்பாகவே இருக்கிறார் . அதை வைத்து அவர் என் மீது சந்தோசமாக இருக்கிறார் என்று கூறமுடியாது. அவர் நமக்கு அப்பாவாக இருக்கிறார் அதை வைத்து நம் மீது சந்தோசமாக இருக்கிறார் என்று கூறமுடியாது. மனிதர்கள் எல்லாரிடமும் அவர் சந்தோசமாக இருக்கிறார் என்றும் கூற முடியாது . அவர் பரிசுத்தமுள்ள தேவன் அவர்  நம்மை பரிசுத்தத்துக்கு அழைத்து இருக்கிறார். அந்த பரிசுத்தம் அவருடைய சத்திய வசனங்களில் இருக்கிறது. (யோவான் 17:17). அதை கை கொள்ளும்பொழுது, அதற்கு  உண்மையாய் கீழ்ப்படியும் போது நமக்குள் ஒரு ஜீவன்(இயேசு) பிறக்கும். அது நம்மை சாந்தமுள்ள சந்தோசத்தில் வைத்திருக்கும் .  இப்படியாய் நாம் சத்திய வசனங்களுக்கு கீழ்ப்படியும் போது தேவன் நம் மீது சந்தோசமாக இருக்கிறார். இதை காட்டிலும் வேற எதிலும் உங்களிலும் என்னிலும் பார்த்து சந்தோசப்படமாட்டார். என்பதை அறிய வேண்டும் . இந்த உலகில் பரிசுத்தமாய் வாழும் மனிதர்கள் குறைவு . ஆனால் நாம் அதை அடைவதற்கு அவருடைய சத்திய வசனத்துக்கு கீழ்ப்படியும் போது அவர் சந்தோசமாக இருக்கிறார்.  கைக்கொள்கிறதினால் வருகிற  அவருடைய ஜீவன். நம் மீது தேவன் சந்தோசமாக  இருக்கிறார் என்பதை உணர்த்திவிடும்



என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று கேள்விப்படுகிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை. (III யோவான்1 அதிகாரம், 4 வசனம் )