Saturday, 24 August 2019

தங்கத்தை பற்றி வேதகாமம் சொல்லுவது என்ன ?

சகோதரர். சகரிய பூணன் செய்தியில்  படித்ததில் பிடித்தது ...
தங்கம் நல்லதுதான் ஆனால் நாம் அதை வேலைக்காரனாக வைத்து இருக்க வேண்டும். வேதம் சொல்கிறது. பரலோகத்தில் தங்கம் உள்ளது . ஆனால் அது எங்கு இருக்கிறது என்று பார்த்தால் , அதுதான் பரலோகத்திற்கு பூலோகத்திற்கும் உள்ள வித்தியாசம். பூமியில் தங்கம் கழுத்திலும்,தலைக்கு கிரீடமாக உள்ளது .ஆனால் பரலோகத்தில் நமது காலடியில் இருக்கும். அதில் தான் ரோடு போடப்பட்டுள்ளது. நாம் அதன் மேல் நடந்து செல்வோம். பரலோக சிந்தை உள்ள மனிதனுக்கு தங்கம் காலடியில் இருக்கும்.அது அவனை ஆளுகை செய்யாது. பூமிக்குரிய கிறிஸ்தவனுக்கோ தங்கம் அவன் தலையிலும். மனதிலும் இருக்கும். அவனும் அதை நேசிப்பான். எப்படியெனில் ஒரு வாலிபன் தான் நேசிக்கும் ஒரு பெண்ணை எப்பொழுதும் நினைத்து கொண்டிருப்பதை போல நீ எப்பொழுதும் பணத்தை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தால் பணத்தை நேசிப்பவனாய் இருப்பாய். பண ஆசை எல்லா தீமைக்கும் வேறாய் இருக்கிறது.