Tuesday 12 June 2018

பிதாவின் ஐக்கியம்

             

இயேசு கிறிஸ்து பிதாவின் சித்தம் செய்வதை போஜனமாக கொண்டு இந்த பூமியில் வாழ்ந்து வந்தார். ஆனால் கெத்சமனேவில் இதை விட மேலான ஒன்றை நமக்கு காண்பித்து இருக்கிறார். அது பிதாவின் ஐக்கியம். அந்த ஐக்கியம் சிலுவையில் பிரியும் என்று அறிந்து பிதாவிடம் வேண்டுகிறார். அவரால் அதை தாங்கி கொள்ள முடியவில்லை.  அவருடைய வியர்வை இரத்த துளிகளால் இந்த பூமியில் சிந்தியது.
தான் சிலுவையில் சாக போகிறோம் என்பதர்காக அல்ல. பிதாவின் ஐக்கியத்தை விட்டு பிரியாகூடாது என்பதை விரும்பினார். பிதாவும் இயேசுவும் ஒருமைப்பாட்டில் எப்பொழுதும் ஒன்றாக இருக்கிறார்கள்.



இந்த பூமியில் நாம் எந்த சூழ்நிலையில் வாழ்ந்தாலும் இயேசுவை முன்மாதிரியாக வைத்து வாழ முடியும். பிதாவின் ஐக்கியத்தை மேன்மையாக பார்த்து இந்த பூமியில் நம்மால் வாழ முடியும். பிதாவின் ஐக்கியம் இல்லாமல் நம்முடன் இருக்கும் சகோதரிடம் அன்பு கூறமுடியாது. அப்படி அன்பு கூர்ந்தால் அது மாயமான அன்பாகத்தான் இருக்க முடியும். ஆனால்  அநேகர் பிதாவின் சித்தம் செய்வதில்லை.
சின்ன சின்ன காரியங்களில் பிரிந்து செல்கின்றனர். பிதாவின் சித்தம் செய்யாமல் இருப்பவர்கள் பிதாவின் ஐக்கியத்தை மேலாக பார்க்க முடியாது. பிதாவின் சித்தம் செய்கிறவர்கள் பிதாவின் ஐக்கியத்தை மேலாக பார்த்து அவருக்குள் நிலைத்து இருப்பார்கள். ஒன்றாக இருப்பார்கள். இதுவே மேன்மையான கிறிஸ்துவ வாழ்க்கை