எழுதியவர் : தானியேல்
ஒரு மனிதன் இரட்சிக்கபடுவதற்கு தேவனுடைய பெலன் முக்கியமாய் இருக்கிறது (ரோமர் 1 : 16).. வேதத்தில் இருந்து மூன்று காரியங்கள் தேவபெலனாயிருக்கிறது என்று சொல்கிறது . தேவனுடைய பெலன் எப்பொழுதும் உங்களிடம் இருக்கும் பொழுது சாத்தான் உங்கள் கால் அடியில் இருப்பான். எனவே நீங்கள் எப்பொழுதும் தேவனுடைய பெலனுடையவர்களாக இருக்க வேண்டும் அப்பொழுது தேவனுடைய நாமம் உங்களால் மகிமைப்படும்.
ஓன்று, தேவனுடைய வார்த்தை எப்படியென்றால் தேவ வசனம் உங்களில் நிலைத்திருக்கிறதினாலும் நீங்கள் பொல்லாங்கனை ஜெயித்தீர்கள் (1 யோவான் 2:14) என்று சொல்கிறது . இந்த வசனத்தின்படி நாம் ஜெயம் கொள்வதற்கு தேவ வசனம் பெலனாய் இருக்கிறது. நாம் தேவனுடைய இருதயத்தை அறிந்து அவருடைய வசனத்துக்கு கீழ்ப்படியும் போது, பெலவானாய் மாறுகிறோம்.
இரண்டு நமக்கு பெலனாய் இருப்பது பரிசுத்த ஆவியாகிய தேவன் . எப்படியென்றால் ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார் ( ரோமர் 8 :26 ), ஆவியின் சிந்தையை நன்கு அறிந்தவர் ஆவியானவர் , அவர் நம்முடைய இருதயங்களில் வாசம் செய்யும் பொழுது நாம் பெலவானை மாற முடியும். பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்று (லூக்கா 11 : 13 ) என்று இயேசு கூறுகிறார். நாம் பெலவானை இருப்பதற்கு பரிசுத்த ஆவியை கேட்க வேண்டும் என்று உற்சாக படுத்துகிறேன் .
மூன்றாவது நமக்கு பெலனாய் இருப்பது ஏக சிந்தை கொண்ட கிறிஸ்தவர்களிடம் கொண்டிடும் ஐக்கியம் ஆகும். பாவத்துக்கு விலகியோடி சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாட வேண்டும் என்று (II தீமோத்தேயு 2 : 22) கூறுகிறது. நாம் கிறிஸ்துவுக்குகாக தனியாக எரிந்து விடலாம் என்று நினைத்தால் சீக்கிரத்தில் நம்முடைய பெலன் அணைந்துவிடும். நம்மிடத்தில் அனல் இல்லமால் நாளடைவில் குளிர்த்து போய்விடும் எனவே ஐக்கியத்தை நாட வேண்டும் ஆனால் எல்லாரிடமும் ஐக்கியமாய் இல்லாமல் சுத்த இருதயம் உள்ளவர்களிடம் மட்டும் ஐக்கியத்தை நாடுங்கள் , அப்பொழுது நீதி, விசுவாசம், அன்பு, சமாதானம் இவைகளை பெற்று பெலவானை இருப்பீர்கள்
திருடன் திருடவும் கொள்ளவும் அளிக்கவுமே வருகிறான் என்பது உண்மை இதில் இருந்து நாம் இரட்சிக்கப்படுவதற்கு (பாதுகாப்பாய் இருப்பதற்கு) தேவ பெலன் நமக்குள் இருக்கவேண்டும். தேவனுடைய நாமம் மகிமை படுவதாக ஆமென் ...
No comments:
Post a Comment