Wednesday 11 October 2017

பஸ்கா - Paasover


எழுதியவர் : தானியேல்
பஸ்கா

பஸ்கா என்பது பழைய உடன்படிக்கையில் தேவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஏற்படுத்தின ஒரு பண்டிகை. இந்த பண்டிகையின் முக்கியமாக இரண்டு காரியங்கள் கருதப்படுகிறது ஒன்று  ஜனங்களுக்காக ஒரு ஆடு அடிக்கப்படுகிறது. மற்றோன்று அதை புளிப்பில்லாத அப்ப பண்டிகையை கொண்டாடப்படுகிறது. இந்த இரண்டு காரியங்களும் அநேக பிரமானங்களுக்கும், எதற்காக கொண்டாடப்படுகிறது  என்றும் எப்படி கடைபிடிக்க வேண்டும் என்றும்யாத்திரகமாம்  அதிகாரத்தில் ஆண்டவரால் மிக தெளிவாக சொல்லப்படுகிறது. . இதில்  ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் இஸ்ரவேல் ஜனங்கள் காக்கப்பட்டனர். அதனால் ஜனங்கள் புளிப்பில்லாத அப்பபண்டிகையை  கொண்டாடப்படுகிறது   இது தலைமுறை தலைமுறையாக கொண்டாடபட வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார்.



புதிய உடன்படிக்கையில் வாழும் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு ஆட்டின் இரத்தம் போதுமானது அல்ல. அதனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே பலியாக்கப்பட்டார் .நம் மீது அன்பு வைத்ததினால். அநேகர் இதை கொண்டாடுவதில்லை. கொண்டாடுபவர்கள் அதின் முக்கியத்துவத்தை அறிவதில்லை. இதனால் தான்  ஆவிக்குரிய மரணம்  நிகழ்கிறது.

எப்படியென்றால் பழைய உடன்படிக்கையில் ஜனங்கள் காக்கப்படுவதற்கு ஒரு ஆட்டின் இரத்ததின் மூலமாய் மாம்சீகமான மரணத்திலிருந்து  காக்கப்பட்டனர். ஆனால்  புதிய உடன்படிக்கையில் வாழும் நமக்கு ஆண்டவராகிய  இயேசு கிறிஸ்து பலியாக்கப்பட்டார். அவருடைய குற்றமில்லாத இரத்தத்தினால் நாம்  ஆவிக்குரிய மரணத்திலிருந்து பாதுகாக்கப்படுகிறோம் , ஆனால் இதை அநேகர் கொண்டாடுவதில்லை எப்படி கொண்டாட வேண்டும் என்றும் தெரியவில்லை. பவுல் கொரிந்தியர்க்கு சொல்லும் போது அதை விளக்குகிறார்
எப்படியென்றால் "நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்த மாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்தமாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே.ஆதலால் பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்.."  இந்த வசனத்துக்கு கீழ்படிந்தால் ஆவிக்குரிய மரணத்தில் இருந்து பாதுகாக்கப்படலாம் என்பது உண்மை. ஆவிக்குரிய மரணத்தில் இருந்து எல்லாரோயையும் பாதுகாக்க இயேசு கிறிஸ்து பலியாகினர்

அநேக சபைகளிலே துப்புரவு உண்மை என்கிற புளிப்பில்லாத அப்பத்தோடு கொண்டாட படுவதில்லை . எனவே தான் அது ஆவிக்குரிய சபையாக இல்லாமல் செத்த சபையை இருக்கிறது. பழைய உடன்படிக்கையில் மாம்சத்தில் விருத்தசேதனம் பண்ணப்பட்டவர்கள் மட்டும் பண்டிகைக்கு கலந்து கொள்ளவேண்டும். ஆனால் இப்பொழுது இருதயத்தில் விருத்தசேதனம் பண்ணப்பட்டவர்கள் மட்டும் அதில் கலந்து கொள்ளவேண்டும், ஆனால் இருதயத்தில் விருத்தசேதனம் இல்லாதவர்கள் கூட பண்டிகையை கலந்து கொள்கிறார்கள் என்பது எவ்வளவு வேதனை . அப்படி கலந்து கொள்பவர்கள் மெய்யாகவே மரணமடைவார்கள்அப்படிப்பட்டவர்கள் அறுப்புண்டு போவார்கள் என்று வேதம் சொல்லுகிறது. ஆவிக்குரிய சபையானது  துப்புரவு உண்மை என்கிற புளிப்பில்லாத அப்பபண்டிகையை ஆசரிப்பார்கள். அப்படிப்பட்ட சபையில் இருப்பவர்கள் பாக்கியவான்கள்.


No comments:

Post a Comment