Friday 3 January 2020

வேத வார்த்தைகள் நிறைவேறத்தக்கதான தாகம்

               வேதத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளும் முதலில் நமக்குள் (யோவான் 1:14) நிறைவேற வேண்டும் பின் உலகத்திற்கு நிறைவேற வேண்டும். இதிலே நாம் தாகமாய் இருக்க வேண்டும், இந்த தாகம் எப்படி பட்டதாய் இருக்க வேண்டும் என்றால் , ஒரு மனிதனுக்கு பணத்தை காட்டிலும் அவன் உயிர் மேலானது. அந்த உயிர் போகும் தாருவாயிலும் கூட வேத வார்த்தையை நிறைவேற்ற வேண்டும் என்ற தாகம் இருக்க வேண்டும் (யோவான் 19:28).ஒரு நாளைக்கு மூன்று வேலை சாப்பிடுகிறோம் ஆனால் எத்தனை வார்த்தைகளை நாம் நிறைவேற்றி இருப்போம் என்பது தான் கேள்வி. வேத வார்த்தை தான் நமக்கு உணவு அதிலே தான் நமக்கு தாகம் இருக்க வேண்டும். நம்முடைய உணர்ச்சிகளின் மூலமாய் அந்த தாகம் வாராது. ஆனால் தேவனுடைய சித்தம் உலகத்தில் செய்ய வேண்டும் என்று தீர்மானம் பண்ணும் பொழுதுதான் தாகம்(எபிரேயர் 10 :07) உண்டாகும். 
        
   இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையை பார்க்கும் பொழுது அவர் ஆவியை ஒப்படைக்கும் தருவாயில் கூட வேத வார்த்தைகள் நிறைவேற வேண்டும் என்று தாகமாய் (யோவான் 19:28) இருந்தார். என்ன ஒரு தாகம் அவருக்குள் இருந்து இருக்கிறது! அவரே நமக்கு மூத்த சகோதரர் நமக்கு அவரே வழி இந்த வாழ்க்கையை நாம் பின்பற்ற வேண்டும் .

 இந்த தாகம் நமக்குள் தொடர்ச்சியாக இல்லை என்ற கேள்விக்கு பதில், நாம் தொடர்ச்சியாக தேவனுடைய வார்த்தையை நிறைவேற்றுதல் இல்லை. மனம் போன போக்கில் வாழ்கிறோம் அதுவே அதற்கு காரணம் . வேத வார்த்தை, நமக்கு மனம் போன வாழ்க்கையை சொல்லி கொடுக்காது. அது சிலுவையை எடுக்க சொல்லி கொடுக்கும். அதற்க்கு தயாராக இருந்தால் நாம் வேத வார்த்தைகளை நிறைவேற்றுவோம். நம்முடைய வாழ்க்கையிலும் இயேசுவை போல மரண தருவாயிலும் அந்த தாகம் இருக்க வேண்டும். இதன் மூலமாய் தேவனுடைய சித்ததை செய்கிறோம்
                                
                    

No comments:

Post a Comment