Thursday 27 January 2022

தெய்வ பயம்

நம்முடைய வாழ்க்கையில் தேவன் எதை மேன்மையாக  பார்க்கிறார் ?      

      நம்மிடம் இருக்கும் படிப்பு, பணம், சொத்து, பிள்ளைகள் இவைகளை காட்டிலும் தேவனுக்கு பயப்படுகிற காரியத்தையே தேவன் மேன்மையாக பார்க்கிறார் . 

யோபு தேவனுக்கு முன்பாக உத்தமனும், சன்மார்க்கணும், பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான். அவனுக்கு ஏழு குமாரரும், மூன்று குமாரத்திகளும் இருந்தார்கள், அவனுக்கு ஏழாயிரம் ஆடுகளும், மூவாயிரம் ஒட்டகங்களும், ஐந்நூறு ஏர்மாடுகளும், ஐந்நூறு கழுதைகளுமாகிய மிருகஜீவன்கள் இருந்ததுமன்றி, திரளான பணிவிடைக்காரரும் இருந்தார்கள். அவன் ஊத்ஸ் தேசத்திலே பெரியவனாய்  இருந்தான்.  இவை அனைத்தும் யோபுக்கு இருந்தது (யோபு 1: 1-3) தேவன் அவனிடத்தில் மேன்மையாக பார்த்தது தேவனுக்கு பயப்படுகிற பயத்தைத்தான் இதை  யோபு 1:8 சாத்தனிடம் சுட்டி காட்டுகிறார் என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை என்றார்.

    ஆகவே தேவன் அவருக்கு  பயப்படுகிற காரியத்தை மேன்மையாக பார்க்கிறார் நாம் அதிலே வளர வேண்டும். வேற எந்த காரியம் இருந்தாலும் அதை மேன்மையாக பார்க்க கூடாது 

 தெய்வ பயம் இல்லை என்று எப்படி அறிந்து கொள்வது 

தெய்வ பயம் இல்லை என்றால் கீழே இருக்கிற காரியம் காணப்படும் 

* நீதிமானை இருக்க விரும்பவதில்லை, 

* உணர்வுள்ளவனாய் இருக்க விரும்பவில்லை, 

* தேவனை தேட விரும்ப மில்லை, 

* நன்மை செய்ய விருப்பம் மில்லை, 

*  நாவு வஞ்சனை செய்ய விரும்புகிறது, 

* வாய் சபிப்பினாலும் , கசப்பினாலும் நிறைந்து இருக்கிறது, 

* கால்கள் இரத்தம் சிந்த தீவிரிக்கிறது, 

* நாசமும் நிர்பந்தமும் அவர்கள் வழிகளில் இருக்கிறது, 

* சமாதான வழியை அவர்கள் அறியதிருக்கிறார்கள், 

ரோமர் 3 : 10 -18

தேவ பக்தியுள்ள வாழ்க்கை வாழ்ந்திட தேவனுக்கு பயப்படுகிற பயம்தான் முக்கியமானது. 

    யோபு வாழ்ந்த காலத்தில் வேத புத்தகமே இல்லை ஆனால் தேவனுக்கு பயப்படுகிற வாழ்க்கை அவரிடம் இருந்தது, யோபு சொன்ன அருமையான வார்த்தை, என் கண்களோடே உடன்படிக்கைபண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி? ( யோபு 31-1 ) வேதமே இல்லை என்றாலும் பாவத்தை விட்டு விலகி இருந்தார். வேதத்தை படிப்பதும், செய்தியை கேட்பதும் முக்கியமானது தான் ஆனால் பாவத்தை விட்டு விலகி இருப்பதற்கு தேவ பயமே முக்கியமானது.

தங்கத்திலும், பொன்னிலும் அவர் நம்பிக்கை வைக்காமல் தேவன்பேரிலே நம்பிக்கை வைத்தார் (யோபு 31:24) இது யார் சொல்லி கொடுத்திருக்க முடியும், வேதமும்  போதகரும் , பிரசங்கிமாரும் இல்லை  ஆனால்  தேவனுக்கு பயப்படுகிற பயம் அவருக்குள் இருந்தது 

யோபு சொல்கிறார் நான் குருடனுக்குக் கண்ணும், சப்பாணிக்குக் காலுமாயிருந்தேன். நான் எளியவர்களுக்குத் தகப்பனாயிருந்தேன். விதவையின் இருதயத்தைக் கெம்பீரிக்கப்பண்ணினேன் ( யோபு 29 : 13-16) இது எல்லாம் யார் சொல்லி கொடுத்திருக்க முடியும்?  இதையே தேவனும்  சொல்கிறார் தகப்பன் இல்லாதவர்களுக்கு தகப்பனாய் இருக்கிறேன், விதவைகளின் தேவனாய் இருக்கிறேன் , அனாதைகளின்  தேவனாய் இருக்கிறேன் , அந்நியர்களின் தேவனாய் இருக்கிறேன். எனவே யோபுவுக்கு தேவபக்தியுள்ள வாழ்க்கை வாழ தேவ பயமே உணர்த்தியது 

No comments:

Post a Comment