Thursday 28 May 2015

தேவனுடைய சித்தம்

யோவான் 3:16
    தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
        தேவன் நமக்கு நித்திய ஜீவனை தரும்படியாக அவருடைய சொந்த மகனை தந்து இருக்கிறார், தேவனுடைய சித்தம் மிக பெரியது எப்படியென்றால் ஒருவனும் கெட்டு போககூடாது என்பது அவருடைய சித்தம் இதை வாசிக்கும் நீங்கள்கூட கெட்டு போககூடாது என்பது தேவனுடைய சித்தமாக இருக்கிறது. எனவே இதற்க்கு என்ன செய்ய வேண்டும் என்றால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்துவை விசுவாசிக்க வேண்டும். விசுவாசம் என்பது மூடநம்பிக்கை இல்லை விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது  இந்த விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்க வேண்டும் அவர் எப்படி இந்த பூமியில் வாழ்ந்தார்  இயேசு கூறுகிறார் நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்; நம்முடைய வாழ்கையையும் அப்படியாக இருக்க வேண்டும் இயேசுவிடம் இருந்து தாழ்மையை கற்று கொண்டு வாழ வேண்டும் இது தான் விசுவாசம் நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது இயேசுவிடம் பாவம் காணப்பட வில்லை இப்படியாக நாம் வாழும் பொழுது நிச்சயமாக தேவன் நமக்கு நித்திய ஜீவனை தருவாங்க ஆமென்
    இப்படிக்கு : தானியேல்  


No comments:

Post a Comment